search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்"

    • கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
    • விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(28), ஹெரன்பால்(29), பாபு(27), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்கள் மீது 2019 மே 21-ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.

    அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.

    பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
    • தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

    சென்னை:

    கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனித்தனி குழுவாக முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 14-ந் தேதியன்று சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அவரது வீட்டின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். சபரி ராஜன் வீட்டில் சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    அவர்கள் சபரிராஜன் வீட்டிற்குள் சென்றதும் காம்பவுண்டு கதவு மற்றும் வீட்டின் முன் பக்க கதவை பூட்டினார்கள். பின்னர் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர்.

    சபரிராஜன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்கள். திருநாவுக்கரசுக்கும், சபரி ராஜனுக்கும் எந்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. என்ன தொழில் செய்து வந்தனர்.

    சபரிராஜனுக்கு வேறு யாருடனும் பழக்கம் உள்ளதா? அவர்கள் யார்? யார்? என்றும் விசாரணை நடத்தினார்கள். 30 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையின் போது சபரிராஜன் வீட்டில் இருந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஏற்கனவே சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது கட்டமாக சோதனை நடத்தி சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற்று உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சபரி ராஜனை தொடர்ந்து சதிஷ், மணிவண்ணன், வசந்த குமார் ஆகியோரது வீட்டிற்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவதுடன் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் கைதான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீலை விடுவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளம்பெண்களை ஆளும் கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வக்கீல் அருள், போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வக்கீல் அருள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக போலி ஆடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டதாக கூறி பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிகழ்வுகள் நடந்த சில நாட்களிலேயே குண்டர் சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அருளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் இயங்கும் அட்வகேட்ஸ் சங்கத்தினரின் அவசர கூட்டம் பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார்.

    இதில் வக்கீல் அருள் போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவின் மீதான அடிப்படையில், நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக புகார் கொடுத்த வக்கீலையே குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசாரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அருள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசாரை கண்டித்தும், சிறையில் உள்ள அருளை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று சென்று உள்ளனர்.

    அந்த பட்டியலில் நோயாளிகளின் பெயர், முகவரி, சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா? தற்கொலை செய்து உள்ளார்களா? அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா ? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு செல்போன்கள் வாங்கிய கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் பெற்றவர்களுக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.
    பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இளம்பெண்கள் பலரிடம் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நல சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

    ஆனால் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2-வதாக பதிவான வழக்கு தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக போலி ஆடியோ தொடர்பான வழக்கில் உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த கலையரசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வக்கீல் அருளுக்கு ஜாமீன் கேட்டு, அவரது தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரன், வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு ஆதாரமாக வக்கீல் அருள் தனது அலுவலகத்தில் பணிபுரிந்த கலையரசியை செல்போனில் பேச வைத்து போலி செல்போன் ஆடியோவை வெளியிட்டதால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வக்கீல் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்ற கலெக்டர் சாந்தா, வக்கீல் அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். #CBCIDdocuments #Pollachiharassmentcase #CBI
    சென்னை:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் பல்வேறு தடயவியல் ஆதாரங்களை திரட்டினார்.

    இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்தனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு  வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

    இதைதொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிபிஐ கடந்த 27-ம் தேதி விசாரணையை தொடங்கியது. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். #CBCIDdocuments #Pollachiharassmentcase #CBI
    பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PollachiAbuseCase #HighCourt #TNGovt
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வுப்பெற்ற நீதிபதி மேற்பார்வையிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பெண் வக்கீல் மீனாட்சி உள்பட 10 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

    மேலும், அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது.



    தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் மற்றவர் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். பெண் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பொள்ளாச்சி வழக்கை சரிவர விசாரிக்காத போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். பாலியல் கொடுமை சம்பவத்தில் நடந்தவைகளை உண்மை கண்டறியும் குழு அமைத்து அறிக்கை பெறவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

    இதையடுத்து, இந்த வழக்குகளுக்கு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி,பி., உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #PollachiAbuseCase #HighCourt #TNGovt
    பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட புகாரில் தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து 5 பேர் மீதும் கூடுதலாக இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

    இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் என 10-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் தெரிவித்தனர். ஆனால் எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி, புகார் பெறுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பாலியல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் புகார் செய்யலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு தொலைபேசி எண் அறிவித்திருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் புகார் செய்த நிலையில் இதுவரை 140 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலரை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

    கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கடந்த மாதம் ஒரு ஆடியோவும் வெளியாகி இருந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் பொள்ளாச்சி கும்பலில் 8 பேர் வரை உள்ளதாகவும், இந்த கும்பல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாவும், உடலை திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் கூறி இருந்தார்.


    இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார்? என்பது குறித்து தகவல் கேட்டு யூ-டியூப், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பினர். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    இவ்வழக்கில் குற்ற பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #PollachiAbuseCase
    பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin #tngovt #perambalurmolestationissue

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்” இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

    250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றம் சாட்டப்பட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களையோ, ஆளுங் கட்சியின் முக்கியப் புள்ளிகளையோ மாவட்டக் காவல்துறையும் விசாரிக்க வில்லை.

    பிறகு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

    மாணவ-மாணவியரின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய அ.தி.மு.க அரசு, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது” என்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டது. அதைக்கூட முறையாக வெளியிடாமல் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக்கொண்டது அ.தி. மு.க அரசு.

    அந்த அரசு ஆணையைச் செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து, வழக்கினை சி.பி.ஐ.யிடம் கூட இதுவரை ஒப்படைக்க முடியாமல் இந்த அரசு செயலிழந்து நிற்கிறது. அ.தி.மு.க அரசின் அலட்சியத்தைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் “ஏன் வழக்கை இன்னும் நீங்கள் எடுத்துக் கொள்ள வில்லை” என்று சி.பி.ஐ. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.

    சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் “பொள்ளாச்சி” வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.


    “பொள்ளாச்சி” விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித் திருக்கிறது.

    பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திடவும், “பொள்ளாச்சி பாலியல் வழக்கை” விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப் படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    மே 23-ந்தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும். இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tngovt #perambalurmolestationissue 

    பொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #girlmolestation

    பெரம்பலூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தலிடம் வக்கீல் அருள் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல் பழகி பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது போல் பெரம்பலூரிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.

    மேலும் இந்த தகவலில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், தன்னை நிருபர் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் குழுவாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அவர்களால் பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று இளம்பெண்களை தங்களின் காம இச்சைக்கு இணங்க வைப்பதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் இச்சைக்கு பணிய வைப்பது, தங்களிடம் அடி பணிய மறுக்கும் பெண்களின் வீடியோவை வெளியிடுவோம் என்றும், அதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அவமானத்தில் தற்கொலை செய்வார்கள் என பெண்களை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    தற்போது வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல், ஏ.டி. எஸ்.பி. ரெங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #girlmolestation

    ×